Latest Updates :

Admissions Open 2026-27

Dr MGR Deemed University

Dept. of Tamil

32+

180+

50+

40+

Faculty Members

Students Placed

Tier 1 Placed

Student Aboard

Introduction

தமிழ்த்துறைப் பற்றி

தமிழ்த்துறை 2014 ஆம் ஆண்டு முதல் பொதுத்தமிழ் பாடத்திட்டத்தை வடிவமைத்து பி.காம்., பி.ஏ., பிபிஏ., பி.எஸ்சி., மாணவர்களுக்குத் தமிழ் கற்பிக்கும் துறையாகத் தோற்றம் பெற்றது. மாணவர்களின்  ஆளுமை மற்றும் படைப்பாற்றலை வளர்க்கும் பாடத்திட்டத்தை வடிவமைத்து  மாணவர்களின் திறனை வளர்த்து வருகின்றது.  2019 – 2021 ஆம் கல்வியாண்டில் இளங்கலைத் தமிழ் மாணவர்களுக்குக் கற்பிக்கும் பணியைச் சிறப்புடன்  நிறைவேற்றியது. தமிழ்த்துறையானது,  மாணவர்களுக்குக் கற்பிப்பதிலும், சிறந்த மாணவர்களை உருவாக்குவதிலும் முனைப்புடன் செயல்படுகிறது.  மாணவர்களின் ஆராய்ச்சி மற்றும் திறனாய்வுத் திறன்களை ஊக்குவிக்கும்  துறையாகவும், துறைசார் வல்லுநர்களைக் கொண்டு சிறப்பு சொற்பொழிவுகளையும் மற்றும் பல்வேறு போட்டிகளை மாணவர்களுக்காக நடத்தி அவர்களின் திறனையும் வளர்க்கும் துறையாகாவும் திகழ்ந்து வருகிறது.

தொடர்புக்கு

hod-tamil@drmgrdu.ac.in

Please feel enquiry call us.

Our Social Media Links

தமிழ்த்துறையின் பார்வை (Vision)

தமிழ்த்துறையின் பணி (Mission)

Learn, Teach and Practice validated procedures with Transparency

Edit Content

Programs Offered

Under Graduate

Post Graduate

Dr. R.SHARMILA

B.Sc., M.A., M.Phil., B.Lit., TPT., Ph.D.,

துறைத்தலைவர் பகுதி

அனைவருக்கும் அன்பு வாழ்த்துகள்.

தமிழ்மொழி மீது நீங்காப் பற்றும் அன்பும் நிறைந்த பேராசிரியப் பெருமக்களைக் கொண்ட தமிழ்த்துறையின் தலைவராய் இருப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழத்தின் பாடத்திட்டமானது, மாணவர்களின் படைப்புத் திறனையும் சிந்தனைத் திறனையும் மேம்படுத்தும்   தரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கிடையே கருத்துப் பரிமாற்றம், கலந்துரையாடல், விவாதம், போன்றவற்றினை ஊக்குவித்து அவர்களது மொழித்திறனை வளர்த்து வருகிறது. சிந்தனையாளர்களின் பண்பு நலன்களை அறிமுகப்படுத்தி மாணவர்களின் வாழ்வினில் வளம் பெறச் செய்கின்றது. படைப்பாளுமையையும்  சமுதாயத்தில் சிறந்த தலைமைத்துவமும் வாய்ந்த பண்பினையும் அடையச் செய்தல் என்னும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ளது. இது சிந்தனையைத் தூண்டும் கற்றல் வழிச் செயல்பாடாகும். ஆய்வுத் துறையிலும் மாணாக்கர்கள் தங்கள் திறனாய்வினையும் தனித் திறமையினை வளர்த்துக்கொள்ளும் புதிய நோக்குடன் பல இலக்கியங்களையும்  தமிழ் மொழி, பண்பாடு, தமிழ் இலக்கியம் ஆகியவற்றின் உயர்சிறப்புகளை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் நல்ல ஆய்வாளர்களாவும் வளரச்செய்ய வழிவகுக்கின்றது. திறனாய்வு முறையில் அணுகும் திறமையுள்ள இளைய சமுதாயத்தை உருவாக்கும் உயர்ந்த நோக்கத்துடன் திகழும் தமிழ்த் துறையின் சிறப்பை அறிய வருகைத் தந்தமைக்கு  நன்றி! 

1
Students
Placed
1
Tier 1
Compaines Visited
1
Higher
Studies
1 Lakhs
Highest
Salary Package

Placement

Students Placed in Tier I Companies