Dept. of Tamil
32+
180+
50+
40+
Faculty Members
Students Placed
Tier 1 Placed
Student Aboard
Latest News
தமிழ்த்துறைப் பற்றி
தமிழ்த்துறை 2014 ஆம் ஆண்டு முதல் பொதுத்தமிழ் பாடத்திட்டத்தை வடிவமைத்து பி.காம்., பி.ஏ., பிபிஏ., பி.எஸ்சி., மாணவர்களுக்குத் தமிழ் கற்பிக்கும் துறையாகத் தோற்றம் பெற்றது. மாணவர்களின் ஆளுமை மற்றும் படைப்பாற்றலை வளர்க்கும் பாடத்திட்டத்தை வடிவமைத்து மாணவர்களின் திறனை வளர்த்து வருகின்றது. 2019 – 2021 ஆம் கல்வியாண்டில் இளங்கலைத் தமிழ் மாணவர்களுக்குக் கற்பிக்கும் பணியைச் சிறப்புடன் நிறைவேற்றியது. தமிழ்த்துறையானது, மாணவர்களுக்குக் கற்பிப்பதிலும், சிறந்த மாணவர்களை உருவாக்குவதிலும் முனைப்புடன் செயல்படுகிறது. மாணவர்களின் ஆராய்ச்சி மற்றும் திறனாய்வுத் திறன்களை ஊக்குவிக்கும் துறையாகவும், துறைசார் வல்லுநர்களைக் கொண்டு சிறப்பு சொற்பொழிவுகளையும் மற்றும் பல்வேறு போட்டிகளை மாணவர்களுக்காக நடத்தி அவர்களின் திறனையும் வளர்க்கும் துறையாகாவும் திகழ்ந்து வருகிறது.
தொடர்புக்கு
hod-tamil@drmgrdu.ac.in
Please feel enquiry call us.
Our Social Media Links
தமிழ்த்துறையின் பார்வை (Vision)
- பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு மற்றும் தமிழ் மொழியின் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்த தமிழ் இலக்கியப் படைப்புகள் மற்றும் இலக்கணம் குறித்துத் தொடர்ந்து ஆராய்ச்சி செய்கிறது.
- கல்விச் சேவையை நோக்கமாகக் கொண்டு மாணவர்களின் எண்ணத்தில் ஆராய்ச்சி சிந்தனைகளையும் நல்லிணக்கத்தையும் தூண்டுகின்றது.
- இளைய சமுதாயத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தமிழ்த்துறையின் பணி (Mission)
- மாணவர்களின் ஆளுமைத் திறனை மேம்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகளும் டாக்டர் எம்.ஜி.ஆர் தமிழ்ப்பேரவையின் சார்பாக போட்டிகளும் நடத்தி, அவர்களின் திறமைகளை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது.
- தேசிய மற்றும் பன்னாட்டுக் கருத்தரங்கு, சிறப்புச் சொற்பொழிவுகள் நடத்தப்படுகின்றன.
- தமிழ்த்துறை வெளியீடுகளாக நூல்களும் ISSN எண்ணுடன் வெளியிடப்பட்டுள்ளது.
- தமிழ்த்துறை ஆராய்ச்சித் துறையாகவும் செயலாற்றி வருகிறது.
- மாணவர்களின் அறிவாற்றலும் சிந்தனையும் பெருக வாய்ப்பளிக்கிறது.
- மாணவர்களின் சுய மதிப்பைப் பெருக்க வழி வகுக்கிறது.
- அறிவியல், சமூக சிந்தனையோடு முன் நிற்கவும் வழி நடத்தவும் உதவுகிறது.
- தமிழ் படிக்கும் மாணவர்கள் முதலில் தங்களது தமிழ் உணர்வை செம்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். பிறமொழி சொற்கள் கலவாமல் தனித்தமிழில் பேசிப் பழக ஆர்வமூட்டுகிறது.
Dr. R.SHARMILA
B.Sc., M.A., M.Phil., B.Lit., TPT., Ph.D.,
துறைத்தலைவர் பகுதி
அனைவருக்கும் அன்பு வாழ்த்துகள்.
தமிழ்மொழி மீது நீங்காப் பற்றும் அன்பும் நிறைந்த பேராசிரியப் பெருமக்களைக் கொண்ட தமிழ்த்துறையின் தலைவராய் இருப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழத்தின் பாடத்திட்டமானது, மாணவர்களின் படைப்புத் திறனையும் சிந்தனைத் திறனையும் மேம்படுத்தும் தரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கிடையே கருத்துப் பரிமாற்றம், கலந்துரையாடல், விவாதம், போன்றவற்றினை ஊக்குவித்து அவர்களது மொழித்திறனை வளர்த்து வருகிறது. சிந்தனையாளர்களின் பண்பு நலன்களை அறிமுகப்படுத்தி மாணவர்களின் வாழ்வினில் வளம் பெறச் செய்கின்றது. படைப்பாளுமையையும் சமுதாயத்தில் சிறந்த தலைமைத்துவமும் வாய்ந்த பண்பினையும் அடையச் செய்தல் என்னும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ளது. இது சிந்தனையைத் தூண்டும் கற்றல் வழிச் செயல்பாடாகும். ஆய்வுத் துறையிலும் மாணாக்கர்கள் தங்கள் திறனாய்வினையும் தனித் திறமையினை வளர்த்துக்கொள்ளும் புதிய நோக்குடன் பல இலக்கியங்களையும் தமிழ் மொழி, பண்பாடு, தமிழ் இலக்கியம் ஆகியவற்றின் உயர்சிறப்புகளை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் நல்ல ஆய்வாளர்களாவும் வளரச்செய்ய வழிவகுக்கின்றது. திறனாய்வு முறையில் அணுகும் திறமையுள்ள இளைய சமுதாயத்தை உருவாக்கும் உயர்ந்த நோக்கத்துடன் திகழும் தமிழ்த் துறையின் சிறப்பை அறிய வருகைத் தந்தமைக்கு நன்றி!
Placed
Compaines Visited
Studies
Salary Package